12.உலக குரு தோற்றமானான்
சத்யம்திரும்பி வந்தனன் உரவக்கொண்டா அடைந்தனன்
புதியதான சட்டைஊசி தன்னை எங்கோவிட்டனன்
தொலைந்தஊசி தன்னுடனே மாயைவிட்ட தென்றனன்
கையிலிருந்த புத்தகத்தை தூக்கிவீசி எறிந்தனன்
அனுமந்தராவ் வீட்டிலுள்ள தோட்டத்திலே அமர்ந்தனன்
மனதில்பக்தி கொண்டராவும் உணவுபல படைத்தனன்
தொடவுமில்லை அதனைசத்யம் அமைதியாக இருந்தனன்
விரைந்துவந்த அண்ணணுமே வீடுசெல்ல அழைத்தனன்
மறுத்துசத்யம் அமர்ந்ததாலே பர்த்திக்குமாள் அனுப்பினன்
அன்னைவீடு திரும்பிடவே முயன்றுஅழைத்து வேண்டினள்
அன்னைதந்தை சோதரனும் எனக்குமினி இல்லையே
மண்ணில்உறும் மாயைதரும் உறவுகளும் இல்லையே
என்னிச்சையில் நானும்பர்த்தி வந்திடுதல் கூடவே
கண்ணிமையாய் மக்களைநான் காத்திடவும் மட்டுமே
இன்னுயிராய்க் குடும்பம்தனை நினைத்துவாழ அல்லவே
என்றுசொல்லி அமைந்தனன் கல்மேல்கல்லாய் அமர்ந்தனன்
பள்ளியிலே காலையிலே பிரார்த்தனையின் பாடலை
துள்ளிடுமோர் மனத்துடனே கள்ளமிலா வெள்ளைபால்
துள்ளிடுமோர் மனத்துடனே கள்ளமிலா வெள்ளைபால்
உள்ளத்திலே நெகிழ்வுகொண்டு பாடுவது சத்யமே
கள்ளமிலா சிறுவன்ஒருவன் பாடிடவே முயன்றிட
உள்ளமெலாம் உள்ளதுயரம் நெஞ்சடைக்க கண்ணெலாம்
நீரும்பொங்க இயன்றிடாமல் தவித்தழுதான் அவனுமே
துன்பத்தினால் மனமுடைந்த பள்ளிநண்பர் யாவரும்
அவனுடனே பர்த்திசெல்ல விழைவுகொண்டு வேண்டினர்
கனிவுடனே எடுத்துச்சொல்லி அவர்வரவைத் தடுத்தனன்
இனியுமில்லை சொந்தபந்தம் தனியெனவே எனக்கென
படிப்புமில்லை பணியுமினி உலகநன்மை ஒன்றுமே
துடித்திடவே ஏதுமில்லை என்றுசத்யம் சொல்லினன்
பிறகுபர்த்தி சென்றபிள்ளை அங்கேயேதான் தங்கினன்
விரைவில்அதை பூவுலகின் சொர்க்கமென்றே ஆக்கினன்
மறந்திடவே முடிந்திடாத அற்புதங்கள் நிகழ்த்தினன்
நிறைந்துநெஞ்சில் உலககுரு நல்லபாதை காட்டினன்
Comments
Post a Comment