11.விரூபாக்ஷ சொரூபன்
ஆந்திரத்தின் மாநகர் களில்பெல்லாரி பெரியது
அதன்தலைவர் கனவிலே தோன்றிதேவன் சொன்னது
இறையும்மனித னாகியே அருகிலேதான் உறையுது
காண்பதாகக் கனவினிலே சிறுவனையும் காட்டியது
கனவுகலைந்த தலைவரும் மனைவியிடம் பேசினார்
கனவில்வந்த காட்சிதனை எடுத்துக்கூற லாயினார்
உனக்குமட்டு மல்லகனவு எனக்கும்கூட வந்தது
நினைத்துநினைத்து மகிழுமாறு சிறுவன்முகமும் தெரிந்தது
என்னேநமது பாக்கியம் விண்ணோர்போற்றும் ஜோதியும்
தன்னேவந்து காட்டுது தனதருளைக் கூட்டுது
இன்னுமேன்நீர் நிற்கிறீர் விரைந்திடாமல் இருக்கிறீர்
என்றுமனைவி விரட்டினாள் கன்றுக்கேங்கும் பசுவுமாய்
விரைந்துசென்று தலைவரும் சோதரனை வேண்டினார்
குறைந்தபட்சம் மூன்றுநாள் அனுப்பச்சொல்லி கெஞ்சினார்
உயர்ந்தபதவி உள்ளவர் உலகத்திலே நல்லவர்
பணிந்துகேட்கை யில்மனம் இறங்கவாகுமே கணம்
தனியே ராஜுதன்னையே அனுப்பிடாத மனத்தினால்
தானும்கிளம்பிப் புறப்பட்டார் தம்பியுடன் இருந்திட்டார்
மகிழ்ந்ததலைவர் ராஜுவை வீட்டில்வைத்து பூஜித்தார்
புகழ்ந்துஅவனில் இறைவனைக் காணவேண்டும் என்றிட்டார்
தலைவர்மனைவி இருவரும் தனயன்தம்பி தன்னையே
கலைமிகுந்த நகரமாம் ஹம்பிஅழைத்துச் சென்றனர்
விலையிலாத பெருமையில் உறையும்பரம சிவனுமாம்
விரூபாக்ஷர் கோவிலை விரைந்துசென்று சேர்ந்தனர்
சிறுவன்கோவில் வாசலில் நின்றுசற்று தயங்கினன்
வருவதற்கு எனக்குமே உடலில்சுகமும் இல்லையே
பொறுமையாக நீங்களும் கண்டுவணங்கி வாருங்கள்
திறமையாக நானுமே பைகள்பொருட்கள் நோக்குவேன்
என்றுசொன்ன சொல்லினால் கோபமுற்ற தனயனும்
சென்றுவணங்கச் சிறுவனை வற்புறுத்த லாயினன்
நின்றுகண்ட தலைவரும் அவன்விருப்பம் போலவே
செய்திடவே சொல்லினார் அவனின்சொல்லை மருத்திடார்
கோவில்உள்ளே சென்றனர் இறைவன்தன்னைப் பணிந்தனர்
கண்திறந்து நோக்கினார் தூபதீபம் கண்டிட
கண்நிறைந்த காட்சியாய் சத்யம்அங்கு தெரிந்தனன்
விண்நிறைந்த வாமனன் போலநின்ற சிறுவனாய்
விண்நிறைந்த வாமனன் போலநின்ற சிறுவனாய்
பக்திகொண்ட நெஞ்சினால் தலைவர்உண்மை உணர்ந்திட்டார்
சுற்றியுள்ள யாவரும் சிவனின்சிலைக்குப் பதிலென
சக்திஉமை பாகனாய் விரூபஸ்வ ரூபனாய்
சத்யம்தன்னைக் கண்டனர் மகிழ்ச்சிமனதில் கொண்டனர்
சக்திஉமை பாகனாய் விரூபஸ்வ ரூபனாய்
சத்யம்தன்னைக் கண்டனர் மகிழ்ச்சிமனதில் கொண்டனர்
தனயன்இதனைக் கண்டனன் விரைந்துவெளியில் சென்றனன்
வினயத்துடன் சிறுவன்அங்கு அமர்ந்திருக்கக் கண்டனன்
புரிந்திடாத வியப்பினிலே கலக்கம்மனதில் கொண்டனன்
அறிந்திடாத மானுடத்தின் மயக்கத்திலே இருந்தனன்
அறிந்திடாத மானுடத்தின் மயக்கத்திலே இருந்தனன்
தெரிந்திருந்த தம்பதியர் மட்டும்மனதில் பக்தியால்
தெரிந்திடாமல் இருக்கும்சிவனை சிறுவனிடம் கண்டனர்
அவதரித்துப் பிறப்பெடுத்து பிறப்பறுக்கும் கருணையால்
அவதரித்துப் பிறப்பெடுத்து பிறப்பறுக்கும் கருணையால்
அருளிடவே மண்ணில்வந்த விரூபாட்சன் என்றனர்
ஹம்பிவிஜயம் முடிந்தது நாட்கள்நான்கு மானது
தம்பிபள்ளி சென்றிட வேண்டியுமே இருக்குது
திரும்பிடவே நாங்களே விடைகொடுப்பீர் நீங்களே
அன்பினாலே மனம்கரைந்த அண்ணணுமே சொல்லினார்
நீங்கள்வந்து இருந்தது மனதில்நிறைவைத் தந்தது
எங்கள்சென்ற பிறவியின் புண்ணியத்தி னாலது
உங்களையே அனுப்பிட மனமுமுல்லை ஆயினும்
எங்களுடன் மட்டுமே சத்யம்தனை நிறுத்திட
நியாயமில்லை ஆகவே மனமிலாமல் இசைகிறோம்
என்றுசொல்லி தலைவரும் தங்கத்தினா லானதோர்
ஊசியினைச் சட்டையில் அழகுறவே அணிந்திட
ராஜுவுக்கு அளித்திட்டார் ஏற்றிடவே வேண்டினார்
கொடுத்திடவே வந்தவன் கொள்ளநெஞ்சில் இசைவிலை
மறுத்திடவே செய்வதாய் நினைத்திடாமல் நீங்களும்
பொறுத்துமென்னை அனுப்புங்கள் கருத்தில்என்னைக் கொள்ளுங்கள்
என்றுசொல்லி மறுத்தனன் குன்றெடுத்த கண்ணனும்
தலைவர்மனம் வருந்திட்டார் கண்ணீர்விட்டு அழுதிட்டார்
நிலையில்சற்று இறங்கிவரச் சோதரனை அழைத்திட்டார்
விலையிலாத அன்பின்பரிசு தடையுமில்லை கொள்வது
நிலையில்நீயும் இறங்கிவருதல் இழுக்குமல்ல உனக்கது
சளைத்திடாத வற்புறுத்தல் தன்னால்அன்று சத்தியம்
தலைவர்மனதின் அன்பினாலே மட்டும்பரிசு கொண்டது
ஊசிஎடுத்துச் சட்டையில்தன் அன்பின்அம்பாய்த் தைத்ததுபாசத்திலே தனைஇழந்த தலைவர் நல்லநெஞ்சது..!
Comments
Post a Comment