15. ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே
ஏமிஏமி என்னும்ஒலி காதைவந்து எட்டுது
நம்மில்நம்மில் என்றுஉன்னை நம்பிநாங்கள் நிற்கையில்
ஓமில்ஓமில் நின்றிருக்க ஓடிசெல்லல் நியாயமோ..!
விரைந்துநெஞ் செரித்தசேதி பற்றியதீ பஞ்சிலே
மறைந்துநீ இருந்திருப்ப தென்றுமெங்கள் நெஞ்சிலே
நிறைவுறாது நீயுமிங்கு விட்டுசென்ற உன்'இடம்'
சிறப்புறாது எங்கள்நெஞ்சம் சிறைப்படாம லுன்னிடம்
கறைபடாத நெஞ்சம்கொண்டு சேவைசெய்யப் பழகுவோம்
கரைந்தநெஞ்சின் ஈரம்கொண்டு பாவம்தன்னைப் போக்குவோம்
பறந்திடாத வண்ணம் நெஞ்சில் என்றுமேநீ தங்கிடு
விரைந்துநீயும் பிரேமசாயி வடிவம்தன்னில் வந்திடு
பாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி
சோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி
சூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி
நாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி
கோடியே பாவலர் யாவரும் கூடி
கோடியே நாவுறச் சொல்லினும் பாடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
ஓம் ஸ்ரீ சாய்ராம்
Comments
Post a Comment