Thursday, February 16, 2012

14.அற்புதத்தின் அற்புதம்


ஸ்வாமிசெய்த அற்புதம் கணக்கிலடங் காதது
பூமிதன்னை இயக்கிடும் இறைக்குமது எளியது
பாவியாகி டாமலே பதம்பணிந்து லீலைகள்
அனைத்தும்சொல்லி முடித்திட எந்தன்ஜன்மம் சிறியது

ஒன்றிரண்டு மாவது சொல்லிடவே செய்திட
என்னால்எங்கு இயலுது செய்தமுயற்சி யானது
அதுவும்அவன் அருளில்விளையும் அற்புதமேதானது
எதுவுமவன் அருளில்லாமல் வேறெதனால் நடக்குது
_____________

1

பர்த்தியிலே ஒருமுறை கொட்டியதே பெருமழை 
தத்திதத்தி யேஅலை கரைகடந்து வந்ததே
பீதியிலே மக்களும் ஆசிரமம் சென்றனர் 
பாதத்திலே ஒடுங்கிட பாய்ந்து ஓடிச்சென்றனர் 

பர்த்திநாதன் பார்த்தனன் மனதில் கருணைகொண்டனன்
கரைந்துமனம் உருகினன் எழுந்துமாடி ஏறினன்
விரைந்துவரும் சித்ராவதி நதியின் அலையைநோக்கியே
திறந்தவாயி லிருந்துசாந்தி சாந்திஎன்று சொல்லியே

கரத்தினாலே சென்றிடுக என்றுசைகை காட்டினன்
விரைந்தஅலையும் நின்றது திரும்பிப்பின்னால் சென்றது
துரத்திவந்த துன்பம்போக மக்கள்மனமும் நிறைந்தது
சிறந்திருக்கும் அற்புதமாய்த் தானேஅதுவும் அமைந்தது

_____________

2

மனதில்சிறந்த பக்தராம் குணத்தில்உயர்ந்த வெள்ளையர்
மனதும்மகிழு மாறுமே சிலுவைஒன்றை ஆக்கியே
கணத்தில்கரத்தில் கொடுத்தனன் ஊமையாகச் செய்தனன்
கொடுத்தசிலுவை தன்னுமே அங்குலமாம் அளவிலே
விடுத்தஉயிரும் சென்றிட களைத்துதோன்றும் ஏசுவின்
உருவம்தன்னை தாங்கிய மரத்திலான சிலுவையாம்
வயதுமென்ன என்றுமரத்தை ஆய்வுசெய்து கண்டதில்
வருடம்இரு ஆயிரமாம் *புனிதன்மறைந்த நாளதுவாம்
இறையின்தூதன் ஏசுவின் உயிர்பிரிந்த கணத்திலே
தோன்றிநின்ற கோலத்தின் அச்சுஉருவம் தானிது
சிலுவைசெய்த மரமுமே அசலிலிருந்து வந்தது
என்றுஸ்வாமி சொன்னது உண்மைஎன்று புரிந்தது
*புனிதன் = ஏசு
_________________

3


வால்டர் கோவன்என்கிற வெள்ளைக்காரர் ஒருவரும் 
உயிர்பிரிந்து படுக்கையில் கிடந்திருக்கும் வேளையில் 
உயிர்கொடுத்து அவரைஓர் உறக்கம் கொண்டு எழுவதாய்
செயல்படுத்தி வைத்தது அற்புதமே தானது  
_________________
4
அண்டம்தன்னைப் படைத்தஇறைவன் கண்டுநாமும் மகிழ்ந்திட
அண்டமாக லிங்கம்தன்னைப் படைத்தெடுத்தான் கண்பட 
தங்கலிங்கம் ஸ்படிகலிங்கம் போன்றயாவும் சிறந்ததாய் 
வந்தவண்ணம் இருந்தயாவும் ஆத்மலிங்கம் ஆகுமே
_________________
   
5

அமரநாதன் உறையும்இமயக் குகையில்வாழும் பறவையும் 
விரைந்துவந்து போட்டதுவாம் சிறந்தபக்தர் கைகளில் 
சிறந்துதோன்றும் அதுவும்நல்ல அழகியதோர் லிங்கமாம் 
விரைந்துசென்று பர்த்திவாழும் பக்தர்ராம தாசிடம்
அளித்திடவே குரல்கொடுத்து சென்றதுவாம் பறவையும்
கனிந்திடவே அவர்மனதில் எழுந்ததுவாம் ஆனந்தம்
_________________

6
நிஜமாய்த்தோன்றும் இறைவன்வடிவன் தன்னைநிழலில் பிடித்திட
சிவனின்வடிவ மாகத்தலையில் தோன்றும்அழகுப் பிறையுடன்
எவருமறியும் அன்பின்தோற்றம்  
 ஏசுசிலுவை மார்பிலும்
தெரிவதாக அமைந்த படங்கள் இன்றுமுண்டு பர்த்தியில்
_________________

7
பிறந்தஉயிரின் நோயின்கொடுமை தீர்த்துக்களைந்த நிகழ்வுகள்
எண்ணிறந்த தாகும்கணக்கில் சொல்லிடுதல் அறிதுமாம்
இறையுருவின் செயலுமின்றி மாந்தர்செய்தல் இயலுமோ?
பறைஎனவே சாற்றிடவே ஆகும்வருடம் பலவுமாம்
_________________
8
பிறந்தமக்கள் வாழ்ந்திட சுரந்தநீரின் ஊற்றினை
விரைந்துமளித்த கருணையால் சிறந்தஊரும் ஆயிரம்
நிறைந்தகருணை தனக்குக் காலம் கடந்துசாட்சி யாயிரும்
அன்புத்தந்தை இல்லையேல் வறண்டபாலை யாயிரும்
உடலின்நோய்கள் போக்கிட இலவசமாய்ச் சேர்ந்திட
கடலின்பரப்பு மென்றிட பரந்ததாக ஓர்மனை 
சிறந்தமருந்தின் பெருமனை தந்தபெருமை தானுமே
அற்புதமாய் இருந்திடும் காலம்கடந்து உறைந்திடும் 
_________________

9
பரந்தஇந்த உலகெலாம் நிறைந்தகலியின் கொடுமையால்
சிறந்தநல்ல பண்புகள் தொலைந்துதானே போனது
மறத்தின்ஆட்சி மனதினில் நிலையும்கொண்டு இருந்தது
அறத்தின்சாயல் இன்றியே தன்னலமே மிகுந்தது 

நிறைந்ததன் னலம்தனைப் பிறந்தஅன்பின் சேவையால் 
பறந்தடிக்கச் செய்யலாம் என்றுரைத்த தன்றியும்
சிறந்தசேவைத் தொண்டரின் படைஅமைத்துப் பாரெலாம்
பெரியசெயலைப் புரிந்தவ ஏழைகளைக் காத்தவ
_________________10

சிறந்தநல்ல பண்பினை சிறிதுசிறிது மேயென
நிறைந்து கொள்ளலாகவே மனதில்வந்து சேர்ந்திட
அன்புகொண்டு அன்பது செய்தமாற்றம் ஒன்றுமே 
அற்புதத்தின் அற்புதம் நெஞ்சில்நிற்கு மேநிதம் 
_________________


No comments:

Post a Comment