Thursday, February 16, 2012

9.புவி உய்ய கவிசெய்த பிள்ளை


புவியில்மானி டப்பிறப் பெடுத்துவந்த இறையுமே
கலைகள் செய்ததாவது பெருமைகொள்ள அன்றது
நிலையுமிலாப் பிறப்பறுத்து இருளகற்றத் தானது
விலையுமிலா ஆன்மத்தின் ஒளியுமேற்றத் தானது 
சிலையினழகுக் கண்ணனும் குழலுமூதி ஜீவனைப் 
பரம்வசிக்கச் செய்தது இதனாலேயே தானது 
இந்தஉண்மை கூடஅவன் அருளால்மட்டும்விளங்குது
மனதில்மென்மை குணத்தில்மேன்மை கொண்டவர்க்கே விளங்குது

சிறுவயதில் ராஜுபலப் பாடல்களை எழுதுவான் 
சிறுவர்களாம் நண்பர்வேண்ட இசையமைத்துப் பாடுவான்
பெரியவரும் அவன்கவியில் மனம்மயங்கி ஆடுவர்
பெரியகவி அரசனென்று அவனைச் சொல்லி போற்றுவர்

இந்தசேதி பர்த்திகிராமம் மட்டுமின்றி அருகினில் 
இருந்தஊரும் காற்றினைப்போல் சென்றுமேதான் அடைந்தது
சிறந்தசத்யம் கவிதைத்திறன் அறிந்துகொண்ட வாணிபன்
ஒருவன்விரைந்து பர்த்திவந்து ராஜுவினை வேண்டினான்

உடுத்தநல்ல சட்டைத்துணியை தைத்துநானும் தருகிறேன்
எடுத்துநன்கு சொல்லிடவென் மருந்துக்குநீ பெயர்கொடு 
படுத்துத்தூங்கும் வாணிபமும் நிமிர்ந்துநிற்க உயிர்கொடு
விடுத்துத்தயக்கம் எடுத்துஇயக்கும் கவியில்பாடல் எழுதிடு 

பாடல்எழுதித் தருகிறேன் பிழைத்திடநான் உதவுவேன்
கிடைக்கும்எதுவும் கூலியாக வாங்கநானும் விரும்பிடேன் 
கொடுக்கவேநான் வந்தவன் பெறுவதனால் மகிழ்வுறேன்
எடுத்துசொல்லு மருந்தின்பெருமை எழுதிடநான் பாட்டிலே 

இதனைச்சொல்லி சிறுவன்மருந்தின் பெருமைகளும் தன்மையும்
அதனால்குணம் பெற்றவரின்பெயரும் விவரம்தன்னையும்
கூர்ந்துகேட்டு ஆய்ந்துகண்டு அற்புதமாய்ப் பாட்டிலே
சேர்ந்துமிசை செய்யும்வண்ணம் அமைத்துத்தந்தான் நொடியிலே

உடனிருந்த வாணிபனும் பாட்டைக்கேட்டு மகிழ்ந்தனன்
குடம்குடமாய் கண்ணிருந்து நீர்பெருக்கி நெகிழ்ந்தனன்
உடனுக்குடன் தருவதாக உடையைத்தைத்து தந்தனன்
உடலிருந்து அழகுறவே அணிந்திருக்க வேண்டினன்

இடமுமில்லை நான்பெறவே தருவதானப் பொருள்களை
தயங்கிடாமல் வழங்கிடுநீ தேவைஉள்ள பேருக்கு

என்றுசொல்லி அன்பளிப்பை சிறுவன்மறுத்துத் தள்ளினன்
புண்ணியத்தைப் பெறும்படியாய் வாணிபனை ஆக்கினன்
சிறுவன்பாடல் சிறந்தது காற்றில்எங்கும் பறந்தது 
வருவோர்எல்லாம் வாங்கமருந்தும் காலியாகிப் போனது

பெற்றலாபம் தன்னில்மனம் மகிழ்ந்துநின்றான் வாணிபன்
சுற்றமெல்லாம் அறிந்திடவே புகழ்ந்துசொன்னான் ராஜுவை
ஒருவன்பெற்ற நன்மைகண்டு பலரும்தேடி வந்தனர்
பெருகும்கருணை நெஞ்சமுள்ள பாலகனைக் கெஞ்சினர் 
திறனில்பெருகும் அருவிஎனப் பாட்டெழுதித் தந்தனன் 
உலவுகின்ற கவியினுக்கோர் கவியுமாக நின்றனன்

No comments:

Post a Comment