தபோவனம் அத்யாயம் 10,11




ஞாலத்துயிர் படைத்து-காத்து உயிருமா..யிருப்பவன்

காலத்துக்கே காலம்சொல்லி காலம்-கடந்து நிற்பவன்
சீலம்-கண்டு போற்றலாகக் கோலம்-கொண்ட கோமகன்

காலம்-தன்னை நீட்டிக்-குறுக்கி ஞாலம்-போற்ற நிற்பவன்

 

மனதில்-உண்மை பக்தி-கொண்டு நினைவில்-என்னை மட்டும்-கொண்டு

பொன்னை-இல்லை பொருளை-இல்லை எதையும் மகிழ்ந்து-ஏற்கிறேன்

இலையைக்கூடப் பெரிது-என்று கருதி-உன்னை அணைக்கிறேன்

உனது-எளிய பூஜை-தன்னை யக்ஞமாக கொள்கிறேன்

 

என்று-கீதை தன்னிலே அன்று-நீ உரைத்தது

இன்றும்-கூட மண்ணில்-நின்று நல்ல-பாதை கொடுக்குது

கலியில்-உந்தன் எல்லையற்ற அன்பு-அதையும் கடந்தது

புல்லைக்-கூட புஷ்பம்-போல ஏற்றுமகிழ்ந்து நின்றது

 

அன்பில்-கண்கள் உதிர்க்கும்-நீரின் துளி-உன்-நெஞ்சைக் கரைக்குது

முன்பின்-தெய்வம் பெய்திடாத அன்பு-மழையைப் பெய்தது

என்னே-உந்தன் சௌலப்யம் என்னே-எங்கள் பாக்கியம்

சாயி-என்ற நூறின்-நூறு அன்னை-இருக்க ஏன்-பயம்  .  








Comments