தபோவனம் அத்யாயம் 7,8,9
உலகைப் படைத்த
பிரமன்நீ
அதனைக் காக்கும் விஷ்ணுநீ
அண்ட மடங்கும் ஊழிலும்
நின்று நிலைக்கும் சிவனும்நீ
வித்து மான முதலும்நீ
செத்தும்வாழ முடிவும்நீ
சத்தி யத்தின் பாசம்நீ
சக்தி ரூபத் தந்தைநீ
நின்றி ருக்கும் ஆதிநீ
வென்றி ருக்கும் வெற்றிநீ
சென்றுசேர கதியும்நீ
என்றும் ஆத்ம சோதிநீ
ஒன்றை ஒன்று ஆக்குவாய்
நெஞ்சை நன்று ஆக்கிட
அன்பை வந்து ஊட்டுவாய்
எங்கள் நெஞ்சு
பண்பட
பற்றி
யுந்தன் பாதமே
ஒன்றி நாமம் சொல்லிட
போற்றி யுன்னைப் பாடிட
முக்தி முக்தி முக்தியே..!
Comments
Post a Comment