Friday, June 26, 2020

9.புவி உய்ய கவிசெய்த பிள்ளை






சிறுவனான சத்யம்-மூர்த்தி சிறியதாயினும்
அவனின்-கவியின் புலமை-கீர்த்தி பெரியதாகுமே
நண்பர்-மட்டும் அன்றி-ஊரில் பலரும் அறியவே
அவனின்-கவிதை புனையும்-திறமை ப்ரசித்தியானதே

பெரிய-கடை ஒன்றின்-உரிமை..யாளர்-சத்தியம்
தன்னைத்-தேடி வந்து-கவியில் பாடல்-ஒன்றையே
கடையில்-விற்கும் மருந்தினுக்கு எழுதச்-சொல்லியே
வேண்டிக்-கேட்டுக் கொண்டு-நின்றார் விநயமாகவே

சத்யம்-மருந்தின் மீது-புனைந்த அழகுப் பாட்டிலே
மயங்கிக்-கூட்டம் சேர்ந்ததம்மா அது-தன் பாட்டிலே
வாங்க-வாங்க தீர்ந்ததம்மா மருந்து பாட்டிலே
வாங்காதோர் வாங்கிக்-கொண்டார் திட்டு வீட்டிலே

புவிக்கு-அரசன் கவிக்கும்-அரசன் என்று-காட்டினான்
தவிக்கும்-எவர்க்கும் உதவிக்கரத்தை உவந்து-நீட்டினான்
செவிக்கு-உணவு என்று-இசைக்கப் பாட்டு-கட்டினான்
ரசிக்க-மட்டும் அன்றி-அதனில் வழியைக் காட்டினான்
வாழ்க்கை வழியைக் காட்டினான்

ப்ரேம-வடிவில் பிறந்த-சாயி சரிதம்-கேளுங்கள்

சரிதம்-கேளுங்கள் சரிதம்-கேளுங்கள் புனிதச் சரிதம்-கேளுங்கள்



STORY LINE


No comments:

Post a Comment