சத்ய சாயி மஹிமை
யாதுமாக
நின்று-ஊழில் யாதும்-போக சென்றழித்து
தூய்மையாகி..யேதிடத்து நின்றிருக்கு..முன்னிடத்து
ஓய்ந்திடாத.. ஓர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று
ஓயுகின்ற..தோரிடத்தின்
ஊழினுள்ளு..மேஇருந்து
நிகழ்வதில் இருந்திருந்த..ளிப்பதில் மகிழ்ந்திருந்து
விழைவுடன்-ப..டைத்திருந்த..னைத்துமிங்கு காத்துநின்று
பிழைபடா
துடைதிறத்.. தெடுத்து-நின் கொடைதனைக்
குறைபடா..தளிக்கும்நீயும் மன்னர்-மன்ன..னல்லவோ..!
_______________
ஆடிய நின்பதம் நினைவினில் தேடி
பாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி
ஜோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி
சூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி
நாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி
கோடியே பாவலர் யாவரும் கூடி
கோடியே நாவுறச் சொல்லினும் பாடி
முடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி
______________
ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி
ஓம் சாயீச்வராய வித்மஹே
சத்ய தேவாய தீ மஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்
ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி
Comments
Post a Comment