தபோவனம் அத்யாயம் ஆறு
கேட்டவர்க்கு கேட்டபடி
காட்சி-தந்த ஸ்வாமி-நீ
யாகம்-தன்னில்
மகிழ்ந்து-நீயும் தந்த-காட்சி கணபதி
அவனின்-தம்பி சுப்ரமண்ய
ரூபம்-தன்னைக் காட்டியே
பக்தர்-நெஞ்சில்
பக்தி-இன்னும் பெருகச்-செய்த மாட்சி-நீ
கலியில்-சாயி ராமனாக
வந்து-கருணை தந்து-நீ
விதியை-மாற்றும்
ஆதி-பரம் பொருளின் வடிவம்-என்பதை
உணர்த்த-பரம சிவனின்-தோற்றம்
தன்னில்-வந்து காட்டினாய்
அன்று-வந்த ராமனாய்
பின்னர்-வந்த ஷ்யாமனாய்
புத்தராக ஏசுவாக
அரிய-தத்த வடிவமாய்
பக்தர்-முன்னர்
தோன்றினாய் உனது-உண்மை காட்டினாய்
யாவும்-ஒன்று எதிலும்-ஒன்று
உள்ளிருக்கும் தெய்வம்-ஒன்று
ஆசி-பெற்ற நெஞ்சினுக்குத்
தோன்றும்-நன்று சாயி-என்று
Comments
Post a Comment