தபோவனம் அத்யாயம் நான்கு


யாரும்முயல என்னைஅறிய இயலாமல்தான் போகுது

பாருமிதை யாரெனநான் அறிவதாகப் பேரினை

   தரையினிலே காட்டிடுவேன் என்றுமலர்  மல்லிகை

கரத்தினிலே எடுத்துத்தரையில் வீசிஎறிந்து சிரித்தனன்

 

வீசியபூ சிதறவில்லை சிறுவன்மனது பதறவில்லை

கூசியேகண் மூடும்வண்ணம் கொண்டஒளிச் சிதறல்கொண்டு

முத்துக்களாய் சேர்ந்தபூக்கள் எழுதிநின்ற பேரடா

முத்திதரும் சத்யசாயி பாபாஎன்று தானடா

 

மாயமில்லை மந்திரமும் இல்லைமனதில் அன்படா

தூயவனாய் வந்தகண்ணன் கலியில்கொண்ட பேரடா

நித்தியத்தில் கொண்டு-சேர்க்கும் எண்ணும்நெஞ்சைத் தானடா   

சத்தியத்தின் அன்புத்தந்தை என்னும்-பொருளி..லேயடா

 

கூறிடவே நாவினிக்கும் நீயும்-சொல்லிப் பாரடா

ஊறிடுமே  நெஞ்சினிலே அன்புத்தேனின் ஊற்றடா

பாரினிலே பின்னொருநாள்  புகழ்பரப்பு மேயடா

சேருகின்ற அடியவரை அணைத்திருக்கும் தாயடா 

 

விண்டுசொல்ல முனிவருக்கும் இயன்றிடாத ஓர்பொருள்

பண்டுமுதல் இருந்திருக்கும் ஆதியான பரம்பொருள்

 மண்டும்மன இருளைப்போக்கு..கின்றதானத் திருவருள்

கண்டறிந்து உய்யுகின்ற திறமிலாத வெங்கமர் 

 

அச்சமாக வாயடைத்து ஊமையான ஓர்சுவர்

துச்சமாக  அதுவரையில் நினைத்ததந்தை.. யாம்-அவர்

அன்றுமுதல் மகனிடத்தில் பக்திகொண்டு பழகினார்

கன்றுபோன்ற சிறுவனிடம் சக்திகண்டு மயங்கினார் 

 

தேவர்-பணியும் கடவுள்-மண்ணில் சேவை-செய்ய வந்தது

இவர்க்கு-அல்ல அவர்க்கு-அல்ல எவர்க்கும்-சேவை செய்திடும்

சேவகன்-நான் என்றது சேவை-செய்து-நின்றது

சொல்லும்-செயலும் ஒன்று-நன்று என்று-காட்டுகின்றது 





Comments

Popular Posts