தபோவனம் அத்யாயம் மூன்று




பாற்கடலில் கிடந்தஅரி அருளிடவே வருமருவி 

பாருலகில் உறுபிறவி வந்ததல்ல உடல்மருவி

நீர்முகந்த ஈசுவரி திரண்டெழுந்த நீல-ஒளி

பார்த்திருக்கப் பயந்துதறி சேர்ந்ததுவே ஊடுருவி 

 

பிறந்திருந்த அக்குழவி அழவுமில்லை அதுவழக்கில் 

சிரித்துகன்னம் விழும்குழியில் மரிக்கும்மனம் அதன்அழகில்

கிடந்தவிசைக் கருவியெலாம்  பிறக்கும்-முன்னே எழுந்தனவாம் 

இசைபொழிந்து மகிழ்ந்தனவாம் புவியின்மிசை அதிசயமாம்

 

கண்டதான அதிசயத்தை விண்டதாகச் சொல்லுமுன்னே

கிடந்தவனின் படுக்கையின்கீழ் நெளிந்ததுவே சர்ப்பமொன்று 

கிடந்தவனும் விட்டுணுவே நெளிந்ததுவும் சேஷன்தானே

பிறந்தவன்பேர் சத்தியனாம் தரையில்-வந்த நாரணனாம் 

 

சத்தியத்தின் தந்தையின் தந்தையாவார் கொண்டமர் 

நித்தியத்தில் இறைவனின் நினைப்புமனதில் கொண்டவர் 

வம்சம்ரத்தி னாகரம் தன்னிலவ தூதராம் 

வெங்கவரின் மீதுபக்தி மனதில்மிகவும் கொண்டவர்

 

இறையின்போத வெங்கவ தூதர்தன்னின் பக்தராம் 

பிறைகள்கண்ட கொண்டமர் அறிவில்இறையைக் கண்டவர் 

உறையும்இறையின் வடிவம்தான் பேரன்சத்யம் என்பதை 

விரைவிலறிந்த பெரியவர் ஞானத்தில்பி தாமகர்




Comments