தபோவனம் அத்யாயம் இரண்டு





ஷிரடி சாயி சிவனின் ரூபம் ஆயி அப்பன் பர்த்தி ரூபம்

உனது முழுதும் ப்ரேம ரூபம் அன்பின் விழுது சாயி ஆகும்

முதலில் வந்த ஷிரடி உருவம் ஜனனம் என்றும் மர்மம் ஆகும்

உனது அருளில் வந்த விளக்கம் மர்மம் போக்கும் தர்மம் ஆகும்

 

துன்பம்-யாவும் இன்பம்-ஆகும் வண்ணம்-நீயும் செய்யும்-மாயம்

பக்தர்-வாழ்வில் பிறவி-நோயும் போகச்-செய்யும் உந்தன்-காயம்

ஷிரடியன்று பர்த்தி-இன்று உடல்கள்-ரெண்டு கொண்டு-அன்பு

காட்ட-வந்த தெய்வம்-ஒன்று அதற்குப்-பெயர் சாயி-என்று

 

அங்கும்-சாயி இங்கும்-சாயி அன்பு-என்று எங்கும்-சாயி

எதையும்-அறியும் அறிவு-சாயி அதனை-உணர்த்தும் புரிவு-சாயி

எனக்கும்-உனக்கும் உள்ளும்-சாயி தரையில்-முளைக்கும் புல்லும்-சாயி

நமக்குப்-பிறகு முடிவு-சாயி நமது-பிறப்பின் விடிவு-சாயி 






Comments